505மத்த நன் நறுமலர் முருக்க மலர்
      கொண்டு முப்போதும் உன் அடி வணங்கித்
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து
      வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே
கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
      கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
      விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே             (3)