508 | உருவு உடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல் தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத் திரு உடை முகத்தினிற் திருக் கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் (6) |
|