509காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து
      கட்டி அரிசி அவல் அமைத்து
வாய் உடை மறையவர் மந்திரத்தால்
      மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
      திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாய் உடை வயிறும் என் தட முலையும்
      தரணியில்-தலைப்புகழ் தரக்கிற்றியே             (7)