51மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
ஐயா அழேல் அழேல் தாலேலோ
      அரங்கத்து அணையானே தாலேலோ            (9)