510மாசு உடை உடம்பொடு தலை உலறி
      வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு
தேசு உடைத் திறல் உடைக் காமதேவா
      நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்
      பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்
      என்னும் இப் பேறு எனக்கு அருளு கண்டாய்             (8)