512 | கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே (10) |
|