514இன்று முற்றும் முதுகு நோவ
      இருந்து இழைத்த இச் சிற்றிலை
நன்றும் கண் உற நோக்கி நாம் கொளும்
      ஆர்வந்தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகன் ஆகி ஆலிலை
      மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன் தனக்கு எங்கள்மேல் இரக்
      கம் எழாதது எம் பாவமே             (2)