515குண்டு நீர் உறை கோளரீ மத
      யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக் கடைக்
      கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக்
      கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக்கடற் பள்ளியாய் எங்கள்
      சிற்றில் வந்து சிதையேலே             (3)