516பெய்யு மா முகில்போல் வண்ணா உன்தன்
      பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன் முகம்
      மாய மந்திரம் தான் கொலோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை
      நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்
      சிற்றில் வந்து சிதையேலே             (4)