518முற்று இலாத பிள்ளைகளோம் முலை
      போந்திலாதோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது
      உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்
      கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய
      சேவகா எம்மை வாதியேல்             (6)