519பேதம் நன்கு அறிவார்களோடு இவை
      பேசினால் பெரிது இன் சுவை
யாதும் ஒன்று அறியாத பிள்ளைக
      ளோமை நீ நலிந்து என் பயன்?
ஓத மா கடல்வண்ணா உன் மண
      வாட்டிமாரொடு சூளறும்
சேது-பந்தம் திருத்தினாய் எங்கள்
      சிற்றில் வந்து சிதையேலே             (7)