521முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்
      கக் கடவையோ? கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண் உற
      நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் இந்தப்
      பக்கம் நின்றவர் என் சொல்லார்?            (9)