525எல்லே ஈது என்ன இளமை?
      எம் அனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய்
      பூங்குருந்து ஏறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய்
      வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்
      பட்டைப் பணித்தருளாயே             (3)