526பரக்க விழித்து எங்கும் நோக்கிப்
      பலர் குடைந்து ஆடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள்
      அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்
      இலங்கை அழித்த பிரானே
குரக்கு-அரசு ஆவது அறிந்தோம்
      குருந்திடைக் கூறை பணியாய் 4