53தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ
நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ             (1)