531கஞ்சன் வலைவைத்த அன்று
      காரிருள் எல்லிற் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்
      நின்ற இக் கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
      ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட
      மசிமையிலீ கூறை தாராய்             (9)