539அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல்-கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே             (7)