567கடலிற் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்
திடரிற் குடியேறி தீய அசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே             (2)