574பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயிற் கொண்டாற்போல் மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெருஞ்சங்கே             (9)