578ஒளி வண்ணம் வளை சிந்தை
      உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை
      ஈடழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என்
      கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள்
      ஆவி காத்து இருப்பேனே?             (3)