579மின் ஆகத்து எழுகின்ற
      மேகங்காள் வேங்கடத்துத்
தன் ஆகத் திருமங்கை
      தங்கிய சீர் மார்வற்கு
என் ஆகத்து இளங்கொங்கை
      விரும்பித் தாம் நாள்தோறும்
பொன் ஆகம் புல்குதற்கு என்
      புரிவுடைமை செப்புமினே             (4)