581சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த
      தண் முகில்காள் மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே
      நிரந்து ஏறிப் பொழிவீர்காள்
உலங்கு உண்ட விளங்கனி போல்
      உள் மெலியப் புகுந்து என்னை
நலங் கொண்ட நாரணற்கு என்
      நடலை-நோய் செப்புமினே             (6)