582சங்க மா கடல் கடைந்தான்
      தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ்
      அடி-வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின்
      குழம்பு அழியப் புகுந்து ஒருநாள்
தங்குமேல் என் ஆவி
      தங்கும் என்று உரையீரே             (7)