583கார் காலத்து எழுகின்ற
      கார்முகில்காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப்
      பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம்
      பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒருநாள் தம்
      வாசகம் தந்தருளாரே             (8)