586சிந்துரச் செம்பொடிப் போல்
      திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே
      எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று
      மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத்தோளுடையான்
      சுழலையினின்று உய்துங் கொலோ?            (1)