588கருவிளை ஒண்மலர்காள்
      காயா மலர்காள் திருமால்
உரு-ஒளி காட்டுகின்றீர்
      எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள்
      திருமாலிருஞ்சோலை நம்பி
வரிவளை இற் புகுந்து
      வந்திபற்றும் வழக்கு உளதே?             (3)