589பைம்பொழில் வாழ் குயில்காள்
      மயில்காள் ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள்
      வண்ணப் பூவை நறுமலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள்
      அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய
      நிறம் உங்களுக்கு என் செய்வதே?             (4)