591நாறு நறும் பொழில்
      மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
      வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
      அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
      இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?             (6)