592இன்று வந்து இத்தனையும்
      அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக்
      கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும்
      திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் அடியேன்
      மனத்தே வந்து நேர்படிலே             (7)