593காலை எழுந்திருந்து
      கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி
      மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலைமலைப் பெருமான்
      துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான்
      அவன் வார்த்தை உரைக்கின்றதே             (8)