596கார்க்கோடற் பூக்காள் கார்க்கடல் வண்ணன் என்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான்?
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது? அணி துழாய்த்
தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ             (1)