60சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூகின்றான்           (8)