618 | தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனிவழி போயினாள் என்னும் சொல்லு வந்த பின்னைப் பழி காப்பு அரிது மாயவன் வந்து உருக் காட்டுகின்றான் கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்-இருட்கண் என்னை உய்த்திடுமின் (3) |
|