619அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்
      அவன்முகத்து அன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச்
      சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத்தலம் இவை நோக்கிக் காணீர்
      கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்
      யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.             (4)