620ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது
      அம்மனைமீர் துழதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன்
      கைகண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக்
      காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த
      பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.            (5)