621 | கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப் பூவும் ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடுமின் (6) |
|