623கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
      காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை யாப்பும் உண்டான்
      பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ?
கற்றன பேசி வசவு உணாதே
      காலிகள் உய்ய மழை தடுத்துக்
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற
      கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்             (8)