636பட்டி மேய்ந்து ஓர் காரேறு
      பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய்
இட்டீறு இட்டு விளையாடி
      இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை
      இனிது மறித்து நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே             (1)