637அனுங்க என்னைப் பிரிவு செய்து
      ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
      கோவர்த்தனனைக் கண்டீரே?
கணங்களோடு மின் மேகம்
      கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே             (2)