64 | கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய் மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக் கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (2) |
|