640மாதவன் என் மணியினை
      வலையிற் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா
      ஈசன்தன்னைக் கண்டீரே?
பீதக-ஆடை உடை தாழ
      பெருங் கார்மேகக் கன்றே போல்
வீதி ஆர வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே             (5)