641தருமம் அறியாக் குறும்பனைத்
      தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய
      பொருத்தம் இலியைக் கண்டீரே?
உருவு கரிதாய் முகம் சேய்தாய்
      உதயப் பருப்பதத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
      விருந்தாவனத்தே கண்டோமே             (6)