643வெளிய சங்கு ஒன்று உடையானைப்
      பீதக-ஆடை உடையானை
அளி நன்கு உடைய திருமாலை
      ஆழியானைக் கண்டீரே?
களி வண்டு எங்கும் கலந்தாற்போல்
      கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே             (8)