645பருந்தாள்-களிற்றுக்கு அருள்செய்த
      பரமன்தன்னைப் பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை
      விட்டுசித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே
      வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்
      பிரியாது என்றும் இருப்பாரே             (10)