646 | இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித் திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (1) |
|