647 | வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! (2) |
|