649 | மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப் பாவினை அவ் வடமொழியை பற்று-அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள் கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே (4) |
|