65 | நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால் தம்மனை ஆனவனே தரணி தலமுழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (3) |
|