650இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத்
      தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்
      தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
      மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு என்
      மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே            (5)