651அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
      அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்
      திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்
களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்
      கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என்
      உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே             (6)